à®à¯à®µà¯à®µà®¾à®¯à¯, à®à¯à®²à¯ 25, 2006
பிதாமகன்
தத்தி தத்தி நடக்கும் வயதில்
இந்த சுட்டி பேபிக்கு - நீ
என் விளையாட்டு சினேகிதன்
நீ உயிருள்ள விளையாட்டு பொம்மை
சர்கஸ் சகல வித்தைகள் காட்டும்
என் புன்னகை மன்னன்
நீ அடித்தால் எனக்கு வலிக்கும்
நான் அடி அடியாய்
உதை உதையாய் உதைப்பேன்
உனக்கு இன்பம் சுரக்கும்
புரியாத மொழிகளில்
நாம் அரசியல் பேசுவோம்
அரசியல் நடத்துவோம்
என்றும் வெல்வது நான்
தோற்பது நீ!
ராஜ்ஜியம் எனது
கொடி உனது!
சைக்கிள் பழகும் பருவம்
காயம் படாமல் கற்றுத்
தந்தாய் நீ
பூப்போன்ற பருவமது
அன்பால் அரவணைத்தாய்
இதமாய் தாலாட்டுவாய்
எல்லாம் கற்றுத்தந்தாய்
எனை கறை சேர்ப்பாய்
கடன் பட்டவன் நான்!
எல்லாம் மாறியது ஏன்?
பைக் ஓட்டும் பருவம்
வந்தப்பின்
நீ தான் எனக்கு வில்லாதி வில்லன்
நம் வீட்டுக்கு ரவுடி
நீயா? நானா?
அம்மாவைக் கேள்!
உன் நிழலில் வாழ்பவன்
உன் நிழலைக் கண்டால்
எனக்கு அபாயம்
பார்த்தும் பார்க்காமலும்
ஓரே பார்வையில்
பேச்சும் மூச்சும்
புதுபிக்கும் பழைய அரசியல்
அப்பப்ப 'வயசு' கலவரங்கள்
தொடரும் அராஜகமும்
'சர்வாதிக்கார' உன் ஆட்சியும்
ஆதலால் ஆனோம்
எதிரும் புதிருமாய்
காலங்கள் மாறலாம்
பருவங்கள் மாறாது
அதன் அழகையும்
அழுக்கையும் அறியாத
நம் மனம்?!
அறிந்தும் அறியாமலும்
நாம் நம்மைத் தேடுவோம்
உருகும்
நெகிழும் பொழுதுகளில்
எனக்கு நம்பிக்கையிருக்கிறது
கார் ஓட்டும் காலத்திலவது
உனை முன் இருக்கையில்
நண்பனாய் அமர வைத்து
நான்...
நாம் ஊர் சுற்றுவோம்
ஞாபகம் இருக்கிறதா?
எனை முதற் முதலில் பார்த்து
சொன்னாய்...
உனைப்போல் நானிருக்கிறேன்
அப்பொழுது எனக்கு புரிந்திருக்காது
இப்பொழுது நான் சொல்றேன்
உனைப்போல் நான்
உருவத்திலும்
உணர்வுகளிலும்
இது மறவாதே உண்மை
மாறாது நம் உறவும்.
-----------------------------
முழுவதும் கற்பனையில் எழுதிய 'காவியம்'
யதார்த்தம் நிழலாய் பரவியது எழுதிய பின்
ஒவ்வொரு வரிகளிலும்
ஒரு தந்தையும் ஒரு மகனும் ஒழிந்திருக்கலாம்
என் தந்தையும் நானும் சில வரிகளில்
சிதைந்து போகாமல்
அந்த சில்லறைப் பேச்சுகளிலும்
சின்னமாய் இந்த எழுத்துகளிலும்!
à®à®¾à®¯à®¿à®±à¯, à®à¯à®²à¯ 09, 2006
எவனோ ஒருவன்...
எவனோ ஒருவன் வாசிக்கின்றான்
வசியம் செய்யாமல் நேசிக்கின்றான்
எதை எதையோ யோசிக்கின்றான்
எதையும் சொல்லாமல்
எல்லை மிறாமல்
எண்ணம் மாறாமல்
ஏங்கித் தவிக்கின்றான்
மெல்ல மெல்ல
என் இதயம் திறந்து பார்க்கின்றான்
வெல்லத் தெரியாமல்
அடிக்கும் அலைகளில் தத்தளிக்கின்றான்
தீக்குச்சி போல் என் கனவுகளின் எறிக்கின்றான்
ஈக்குச்சி வைத்து
கவிதைகள் இதயத்தில் கிறுக்குகின்றான்
உருகும் அவன் விழிகளில்
உருகும் மெழுகுவர்த்தியாய் உருகுகின்றேன்
உருகும் மெழுகை அழகாய் காதல் மை பூசி
கண் இமை சிமிட்டாமல் காத்திற்கின்றான்
à®à®©à®¿, à®à¯à®²à¯ 08, 2006

Thanks Gettyimages
மரத்தின் மடியில்
இயற்கை செய்த அறம் -
மரம்.
*****
மரம் போல் நான்
என் தனிமையில்.
மரம் போல் நீ
பயன்படு!
*****
அந்த மரத்தைப்
பார்க்குபோதெலாம்
உன் நினைவுகள்
நிழலாய்
இருந்து போகிறது
*****
நீ கவியம்மா...
உன் மடியில் கிடந்து
கவிப்பால் குடிக்கும் -
கவிஞர்கள்
-------------------------------
இயற்கையில் மிக பிடித்தவை;-
1. மழை பெய்ந்த புல்வெளி
2. தனியாய் நிற்கும் மரம்
3. என்னோடு வாழபோகும் இன்னொரு ஜீவன் :)
வியாழனà¯, à®à¯à®²à¯ 06, 2006
உந்தன் முதல்...
முதல் பார்வை -
இவ்வுலகிற்கு கொண்டுவந்தவரின் பார்வை
முதல் ஒலி -
எல்லொருக்கும் இனிக்கும் சங்கிதம்
உன் முதல் அழுகை
முதல் வார்த்தை -
உன் அன்னையை
பெருமை படுத்தும் 'ம' 'ம்ம்மா'
முதல் பரிசு -
உன் பெற்றோரின் அரவணைப்பு
முதல் கனவு -
வாழ்வில் சிறக்க!
முதல் மயக்கம் -
காதல் மயக்கம்
முதல் காதல் -
உன் உள்ளத்தைக் கிள்ளும்
முதல் முத்தம் -
உன் உயிரைத் திருடும்
முதல் குழந்தை -
உந்தன் வாழ்வின் மறுபிறவி
முதல் வெற்றி -
சமுகத்தில் உனக்கோர் தனியிடம் -
மரியாதை
முதல் இழப்பு -
உன் துணைவியின் மறைவு----------------------------
நான் எழுதிய என் முதல் கவிதை
அந்த இனிய இருபதாம் வயதில்.
உண்மையில் தமிழும் நானும்
துரமாகவே இருந்தோம்
கவிதை வரும் வரையில்...

Thanks Gettyimages
இளமையில் ஒர் முதுமை
திரையில் வரும்
பிரசவக் காட்சிகள்
எனக்குரிய
தகப்பன் உணர்வுகளை
பிரித்து வைக்கும்.
சின்ன குழந்தைகள்
என் முகம் பார்த்து
பூக்கும்போது
தந்தையடையாத
பிரசவ வலி
என்னுள்.
அந்த பிஞ்சுக் கால்கள்
மார்பை
உதைக்கும்போது
எனக்குரிய
தகப்பன் கதவைத்
தட்டுவதாய் கேட்கும்.
அண்ணன் பையன்
''சித்தப்பா, சித்தப்பா''
என அழைக்கும்போது
ஆசையாய்
அலைகள்
என் கறையைத் தேடும்.
இவ்வாறு...
எண்ணங்கள் ஏங்கி
தனிமையில் தவிக்க
இயல்பாய் அடைக்கிறேன்
இளமையில்
ஒர் முதுமை.
-------------------------------
இதை எழுதும் போது
வயசுக்கு மிறிய கருத்துக்கள்
என சில விமர்சனங்கள் வந்தன.
எதையும் கிழ்த்தனமாக எழுதவில்லை!
என் புனித உணர்வுகளைப் படம்பிடித்தேன்
சின்ன சின்ன 'கௌரவ ஆசைக்களை'
இடையில் பின்னியும் வைத்தேன்
பிள்ளைக் கனவோடு...
பà¯à®¤à®©à¯, à®à¯à®²à¯ 05, 2006
முதல் முதலாய்...
முதல் முதலாக உன் குரல் கேட்டு
மகிழ்ச்சி மழையில் நான் நனைவேன்
முதல் முதலாக என் பெயரை
நீ உச்சரிக்கும் போது
மீண்டும் உயிர் நான் தறிப்பேன்
உன் மின்சாரப் பேச்சு
எனக்குள் பாய்ந்து
என்னுள்ளே என்னன்ன செய்யும்
இது காதலா?
வலிபக் காய்ச்சால?
தாங்காதே
இனி தனிமை தாங்காதே...
அழகும் அறிவும் நிறைந்தவள்
நீ தானே
என் கனவுக்கும் நனவுக்கும்
நடுவில் ஓடும் ஒரு நதி
நீ தானே
வானம் என் பக்கம்
நீ வந்தால் சொர்க்கம்
புதிர் போடும் பெண்ணே
பதில் சொல்லாவிட்டாலும்
உன் பதில் நான் தானோ
உன் இம்சைகள் வேண்டும்
அதில் இன்பங்கள் கண்பேன்
கொள்ளாதே
என் ஓருயுரிரைக் கொள்ளாதே
பகலும் இரவும் பொருள் மாறிப் போனது
எல்லாம் உன்னால் தான்
பொய்யும் மெய்யும்
பொருள் மாறிப் போனலும் போகும்
எல்லாம் உன்னால் தான்
நரகமும் சொர்க்கமும்
இப்ப கிட்ட கிட்ட இருக்கு
எல்லாம் உன்னால் தான்
கண்ணுக்குள் மாயம் காட்டி
இதயத்தில் காயம் தீட்டி
நீ எனை ஏமாற்றி போனால்
என் உயிர் மரிக்காது
உனை நினைத்து என் உயிர் மறுகுமே
திà®à¯à®à®³à¯, à®à¯à®²à¯ 03, 2006
தூதுப்போ இதயமே...
மார்ப்பில் ஊறும் உயிரே...
எப்படி எழுதி
உனை மயக்குவது
என தெரியவில்லை
அதையும் நான்
விரும்பவுமில்லை!
இந்த நிமிஷம்
உண்மையாக எழுத
வேண்டும்!
உள்ளம் வலிய
எழுத வேண்டும்!
உனக்காக
எழுத வேண்டும்!
இந்த வார்த்தைகள்
என்னோடு
எந்த நிமிஷமும்
இருக்க வேண்டும்
என் உயிராய்!
என்னிடம்
எதுவும் இல்லை
நீ மட்டும்!
நீ மட்டும்
என் பக்கமிருந்தால்
எனக்கு
எதுவும் தேவையில்லை!
நீ வரும் போது
வாழ்க்கையும் கூட வருகிறது
வாழ்ந்துப் பார்க்க
ஆசையும் வருகிறது.
நேற்று என் கனவில்
வைரமுத்து தோன்றினார்
உற்ச்சகமாய் கேட்டார்
கேட்டது....
' உனக்கும் எனக்கும்
சம்திங் சம்திங்? '
'நத்திங் நத்திங் '
என படப்படத்து
சொன்னேன்.
'' மறைக்கதே!
மறைக்கதே!
மறைத்து
மரியாதே! ''
என எச்சரித்து
மறைந்து போனார்.
என்று என்று
என்க்கு காதல் பிரசவிக்குமோ
அன்று அன்று
அவருக்கு கவிதைத் தீபாவளி.
எனையறியாமல்
'கண்ணாம் மூச்சி ஆட்டம் ஏனட'
எனப் பாடலை
திரும்ப திரும்ப
கேட்கிறேன்
திருத்தித் திருத்தி
ஒரு அர்த்தம் மட்டும்
திண்ணமாக புரிக்கிறது
என்னுள்
அப்பாடலில்
நீயாய் கேட்கிறாய்
'' என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா?
எனக்கென உணர்ச்சிகள்
தனியாக இல்லையா? ''
சுயநலமாய்
சுகத்தைத் தேடி
உடைந்துப் போனேன்!
என் சார்ப்பில்
அந்த கேள்வியைக்
கேட்டால்
எப்படி பதிலளிப்பாய்
எதிர்ப்பார்க்கிறேன்
உண்மையில்
நீயும்
நானும்
பொம்மைகள்
விளையாட வைப்பது
இந்த பொம்மையான
உலகம்!
நீயே
விடையைத் தேடி
உள்ளத்தை
தொடுக்கிறாய்
'' நொஞ்சின்
அலை
உறங்காது ''
உன் இதய உளரல்களோடு
உயிரைக் கோக்குகிறாய்
'' இறுதியில்
உனைக் கண்டேன்
இருதயப் பூவில்
கண்டேன் ''
நானும் கண்டுக்கொண்டேன்
கண்டுக்கொண்டேன்
கண்டுக்கொண்டேன்
என் காதல் முகம்
கண்டுக்கொண்டேன்
விரல் தொடும்
துரத்திலே
என் வெண்ணிலவே
நான் கண்டுக்கொண்டேன்
பொருளைத் தேடி
வருகிறது வாக்கியம்
நீ பொருள்!
நான் வாக்கியம்!
வெளிச்சம் தேடி
வருகிறது சூரியன்
நீ வெளிச்சம்!
நான் சூரியன்!
ஈரம் தேடி
வருகிறது மழை
நீ ஈரம்!
நான் மழை!
அமைதி தேடி
அலைக்கிறது மனம்
நீ அமைதி!
நான் மனம்!
உறவைத் தேடி
அலைக்கிறது உரிமை
நீ உறவு!
நான் உரிமை!
சுவாசம் தேடி
அலைக்கிறது காற்று
நீ சுவாசம்!
நான் காற்று!
உனைத் தேடி
வருவதுதான் அழகு
நீ என் அழகு!
-தொடரும்
à®à®©à®¿, à®à¯à®²à¯ 01, 2006
சொல்லமலே
கனவாய் போகிறாள் ஒருத்தி
கவிதையாய் திருத்தி எழுதுகிறேன்
நித்தம் அவளை மனதில் நிறுத்தி
செதுக்கி செதுக்கி வைத்த வார்த்தைகளை
சொல்லாமல்
பதுக்கி பதுக்கி வைக்கிறேன்
பயமுறுத்தும் பண்புகளால்
பொத்தி பொத்தி வாயை முடினாலும்
சுத்தி சுத்தி அலைக்கிறது உண்மைகள்
உளரும் நெஞ்சோடு
கத்தி கத்தி சொன்னாலும்
அவள் காதுகளில் விழுமோ
கத்தியால் குத்திச் சென்றால்
உயிர் கொஞ்சம் போகுமே
உரிமையாய்..