செவ்வாய், ஆகஸ்ட் 08, 2006

தலை வணக்கம், சிங்கப்பூர்

தோன்றிய காலத்திலிருந்து
தரத்தை நம்பினாய்
மரம் போல் வளர்கிறாய்
வல்லரசு தோட்டங்களை மட்டும் மல்ல
எல்லாத் தோட்டங்களையும்
தொடுகின்றது உனது கிளைகள்

வள்ளுவன் வரிகளை மெய்ப்பிக்கிறாய்
ஒழுக்கம் உன் பழக்கத்திற்குப்போன
மந்திர புழக்கமாய்

சிந்தனை செய் மனமே
சிகரம் தொடலாமேன்று
தெள்ளத் தெளிவாய் கற்றுத் தருகிறாய்
நித்தம் ஏழிலாய் எங்களுக்கு

நீ...
சொர்க்கலோகம் உன் மக்களுக்கு
கனவு மண்டலம் வரும் பயணியர்களுக்கு
ஒரு கல்விக் கூடம் உலக நாடுகளுக்கு
உலகம் மிக மிக சிறியது
என உன் மையத்தில்
ஒரு உலக மயம்
நான் கண்டுப்பிடித்தேன்

கருப்பு வெள்ளையாய் நிருப்பிக்கிறாய்
மக்கள் பலம் எதையும் வெல்லுமென்று
அதை விட என் மனதை நனைப்பது
பல வண்ணம் கொண்ட
ஒரு வானவில் - உன் மக்கள்
உன் மேன் மக்கள்
எந்த வேதம் வேற்றுமையின்றி
வாய் மலர்ந்து
பெருமையாக சொல்வார்கள்
'' நாங்கள் சிங்கப்பூரர்கள்! ''

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு