ஆடி அடங்கும் வாழ்க்கையட

நீ ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திலும்
நீ சிங்கம்
அசிங்கம் உன் எதிரி
எது வெல்லும்?

நீ போடும் ஒவ்வொரு கோடுகளும்
இன்னொருவன் தாண்டாமல்
இருக்க போட்ட கோடு
தப்பித் தவறி தாண்டினாலும்
தந்திர மந்திரமாய்
மின்சாரக் கம்பியாய் மாறினாலும் மாறும்

மனித வரிசையில்
நீ கடைசியில் நின்றாலும்
உனக்கு மட்டும் ஏப்படி
முதலிடம்?

ஆசையாய் தூண்டில் போடுகிறாய்
அது இன்னொருவனுக்கு
தூக்கு கயிறாய்

இரத்தக் கயிறு
பாசக் கயிறு
தொப்புள் கயிறு
தாலிக் கயிறு
எல்லாம்
நீ ஆடும் ஆட்டத்தில் விழாமல்
உனை இழுத்து பிடிக்கும் கயிறுகள்
ஏனோ உன் தப்பாடத்தில்
உனக்காக துண்டிக்கப்படுவது
அக்கயிறுகளே

தப்பு தப்பாய் கணக்குப் போட்டு
அதை சரியாக்குவது
வழகத்திற்குப் போன
உன் சுயப் பழக்கம்

பூஜ்ஜியத்திற்கும் மதிப்பிடுகிறாய்
நடக்கட்டும்...

உனது ராஜ்ஜியம்
சினச் சுவர் வரை பரவியிருந்தாலும்
கடைசியில் அந்ந ஆறடிக்குள் தான்
வந்து முடிவடையும்!

இதை நன்று புரிந்துக் கொள்வாய்
என் புத்தியுள்ள மானிடா!

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு