சனி, ஜூலை 01, 2006

சொல்லமலே

கனவாய் போகிறாள் ஒருத்தி
கவிதையாய் திருத்தி எழுதுகிறேன்
நித்தம் அவளை மனதில் நிறுத்தி

செதுக்கி செதுக்கி வைத்த வார்த்தைகளை
சொல்லாமல்
பதுக்கி பதுக்கி வைக்கிறேன்
பயமுறுத்தும் பண்புகளால்

பொத்தி பொத்தி வாயை முடினாலும்
சுத்தி சுத்தி அலைக்கிறது உண்மைகள்
உளரும் நெஞ்சோடு

கத்தி கத்தி சொன்னாலும்
அவள் காதுகளில் விழுமோ
கத்தியால் குத்திச் சென்றால்
உயிர் கொஞ்சம் போகுமே
உரிமையாய்..

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு