இன்னும் ஏற்றம் பெற

நடுராத்திரியில் யோசித்தேன்
சின்ன சிரிப்போடு சிந்தித்தேன்
இதை இவர்களிடம் கேட்டால்
எப்படி இருக்கும்மென்று...

ஆசானிடம் கேட்டால்
மறக்காத வாக்கியம் போல்
'முயற்சி திருவினையாக்கும்'
என பரிச்சயமாய் பதிலளிப்பார்

சிந்தனையாளரிடம் கேட்டால்
உற்சாகத்துடன் உச்சரிப்பார்
'உன்னால் முடியம்!'

தத்துவ ஞானியிடம் கேட்டால்
மனதில் வெளிச்சமாய்
'மனதை திறந்து வை'
என மனசில் வெள்ளையடிப்பார்

தாயிடம் கேட்டால்
தெய்வ வாக்குப்போல்
'என்றும் நல்லத்தை நினை'
என அரவணைப்பார்

இல்லாத காதலியிடம் கேட்டால்
செல்லமாய் சொல்வாள்
' எனை நினை
நம் காதலை நினை
அன்பை அரவணை! '

சிலிர்த்துப்போய்...
என் இதயத்திடம் கேட்டேன்
துடித்தது
துடித்தது
துடித்தது

அந்த துடிப்பு
என் காதோரம்
ஒரு ரகசியம் சொன்னது
உழை!
உழை!
உழை!
உன் வியர்வை
உன் இரத்தம்
உன் உள்ளம்
வலிய
உண்மையாக உழை!

இன்னுமென்ன
உலகமே
ஒரு நாள்
உன் பெயரைச் சொல்லும்!

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு