வானம் வசப்படும்

வெட்ட வெளியில்
பாதை தெரிந்தும்
திசை மாறி திரிக்கிறோம்
குருடனைப்போல்

குருடனோ
தன் குருட்டு
தைரியத்தில்
துலாவி துலாவி
தன் பாதையைத் தேடினான்
சென்றடைந்தான்.

குறுக்கு பாதையில்
குட்டிக்கரணம்
போடுகிறோம்.

அதோ பார்...
ஒரு நொண்டி
அவன் விழாமல்
நொண்டியடித்தாலும்
நேராகச் செல்கிறான்.

ஆசைகளிலும்
அவசரத்திலும்
நொண்டியடித்து
கோமாளியாய்
விழுகிறோம்.

ஒரு கையில்லாதவன்
அவனது
இன்னொரு
நம்பிக்கையோடு
கைத்தட்டுகிறான்.

இரு கையிருந்தும்
அதிர்ஷ்டத்தில்
பிச்சையேடுக்கிறோம்.

ஊமை
உளருவதில்லை!
உளருகிறோம்
எண்ணங்களை
தெளிவில்லாமல்.

குருடன்;
நொண்டி;
கையில்லாதவன்;
ஊமை;
அவர்களை
ஊனம்
என்று சொன்னோம்.

அவர்கள் பதிலுக்கு
சொல்வார்கள்
'' உங்கள் மனதில்
ஏன் அவ்வளவு ஊனம்!''

உண்மையில்
அவர்களுக்கு
வானம் வசப்படவில்லை
மனம் வசப்பட்டது
அவர்கள் வசப்பட்டார்கள்!

அவர்கள் வாழ்க்கையில்
கஷ்டமிருந்தாலும்
வாழ்வதில் பொருளிருப்பதை
அறிந்தவர்கள்.

அவர்களை பார்த்து
வானம்
தலை வணங்கியது.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு