கண்ணம்மா காதல்

பாரதிமேல் முதல் காதல்:-

சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?
வட்டக் கரிய விழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ ?

பட்டுக் கரு நீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்டநடு நிசியில் - தெரியும்
நக்ஷத் திரங் ளடீ

சோலை மல ரொளியோ - உனது
சுந்திரப் புன்னகை தான்
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ
வாலைக் குமரி யடீ - கண்ணம்மா
மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசு கிறாய் - கண்ணம்மா
சாத்திர மேதுக் கடீ
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா
சாத்திர முண்டோ டீ
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்:
காத்திருப் பேனோடீ - இதுபார்
கன்னத்து முத்த மொன்று.

-----------------------------------

பாரதிமேல் இரண்டாம் காதல்:-

சின்னஞ்சிறு கிளியே - கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீ ர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்.

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்தரமே
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந்தேனே!

ஓடி வருகையிலே - கண்ணம்மா
உள்ளங் குளிரு தடீ
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ!

உச்சி தனை முகந்தால் - கருவம்.
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனையூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ!

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்த மாகு தடீ!

சற்றுன் முகம் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ!

உன்கண்டில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ!
என் கண்ணிற் பாவையன்றோ - கண்ணம்மா
என்னுயிர் நின்ன தன்றோ!

சொல்லு மழையிலே - கண்ணம்மா
துன்பக்கள் தீர்த்திடுவாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்ககந் தவிர்த்திடு வாய்.

இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமொர் தெய்வ முண்டோ?

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ?

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு