யார் வென்றது?

ஒவ்வொரு முறை
உன்னிடம் நான் தோற்றலும்
இன்னொரு படி இறங்குகிறேன்
ஒவ்வொரு படி இறங்கும் போது
உன் இன்னொரு ஆழத்தை
தொடுகிறேன்...
இருந்தும்
நீ எனை எட்டி உதைத்தாலும்
உன் மடியில் தான்
நான் விழுவேன்.

தேடிப்பார்த்தேன்

தேடிப்பார்த்தேன்
தேடிப்பார்த்தேன்
தேடிப்பார்த்தேன்

மண்ணில் காதலைத்
தோண்டிப் பார்த்தேன்
என் முகம் பார்த்தேன்

கொடுப்பதைக் கொடுத்தாய்
எடுப்பதை எடுத்தாய்
எதில் நான் நின்றேன்
எங்கு நான் நின்றேன்
தெரியில்லையே

கண்ணீர் முத்த்ம் வேண்டாம்
மரண யுத்தம் வேண்டாம்
எதைக் கழித்தாலும்
மிச்சம் நான் தானோ

ஓடைப் போல் என் மனம்
கல்லை விட்டெறிந்தால்
கலங்கும் தவிற
என்றும் உடையாது!

இன்னும் ஏற்றம் பெற

நடுராத்திரியில் யோசித்தேன்
சின்ன சிரிப்போடு சிந்தித்தேன்
இதை இவர்களிடம் கேட்டால்
எப்படி இருக்கும்மென்று...

ஆசானிடம் கேட்டால்
மறக்காத வாக்கியம் போல்
'முயற்சி திருவினையாக்கும்'
என பரிச்சயமாய் பதிலளிப்பார்

சிந்தனையாளரிடம் கேட்டால்
உற்சாகத்துடன் உச்சரிப்பார்
'உன்னால் முடியம்!'

தத்துவ ஞானியிடம் கேட்டால்
மனதில் வெளிச்சமாய்
'மனதை திறந்து வை'
என மனசில் வெள்ளையடிப்பார்

தாயிடம் கேட்டால்
தெய்வ வாக்குப்போல்
'என்றும் நல்லத்தை நினை'
என அரவணைப்பார்

இல்லாத காதலியிடம் கேட்டால்
செல்லமாய் சொல்வாள்
' எனை நினை
நம் காதலை நினை
அன்பை அரவணை! '

சிலிர்த்துப்போய்...
என் இதயத்திடம் கேட்டேன்
துடித்தது
துடித்தது
துடித்தது

அந்த துடிப்பு
என் காதோரம்
ஒரு ரகசியம் சொன்னது
உழை!
உழை!
உழை!
உன் வியர்வை
உன் இரத்தம்
உன் உள்ளம்
வலிய
உண்மையாக உழை!

இன்னுமென்ன
உலகமே
ஒரு நாள்
உன் பெயரைச் சொல்லும்!

வானம் வசப்படும்

வெட்ட வெளியில்
பாதை தெரிந்தும்
திசை மாறி திரிக்கிறோம்
குருடனைப்போல்

குருடனோ
தன் குருட்டு
தைரியத்தில்
துலாவி துலாவி
தன் பாதையைத் தேடினான்
சென்றடைந்தான்.

குறுக்கு பாதையில்
குட்டிக்கரணம்
போடுகிறோம்.

அதோ பார்...
ஒரு நொண்டி
அவன் விழாமல்
நொண்டியடித்தாலும்
நேராகச் செல்கிறான்.

ஆசைகளிலும்
அவசரத்திலும்
நொண்டியடித்து
கோமாளியாய்
விழுகிறோம்.

ஒரு கையில்லாதவன்
அவனது
இன்னொரு
நம்பிக்கையோடு
கைத்தட்டுகிறான்.

இரு கையிருந்தும்
அதிர்ஷ்டத்தில்
பிச்சையேடுக்கிறோம்.

ஊமை
உளருவதில்லை!
உளருகிறோம்
எண்ணங்களை
தெளிவில்லாமல்.

குருடன்;
நொண்டி;
கையில்லாதவன்;
ஊமை;
அவர்களை
ஊனம்
என்று சொன்னோம்.

அவர்கள் பதிலுக்கு
சொல்வார்கள்
'' உங்கள் மனதில்
ஏன் அவ்வளவு ஊனம்!''

உண்மையில்
அவர்களுக்கு
வானம் வசப்படவில்லை
மனம் வசப்பட்டது
அவர்கள் வசப்பட்டார்கள்!

அவர்கள் வாழ்க்கையில்
கஷ்டமிருந்தாலும்
வாழ்வதில் பொருளிருப்பதை
அறிந்தவர்கள்.

அவர்களை பார்த்து
வானம்
தலை வணங்கியது.

என் கண்ணம்மா மையல்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
மீண்டும் சிரிக்க பழகி விடு
சிந்தனை துளிகளிலே கண்ணம்மா
துயரம் எதுவுமிருந்தால்
என்னிடம் கொடுத்துவிடு
என்னிடம் கொடுத்துவிடு

வார்த்தைகள் சொல்வதிலை கண்ணம்மா
உன் வலி நானறியேன்
உள்ளமும் உடைந்து நின்றேன்

என்னுயிர் காப்பவளே கண்ணம்மா
உன் எண்ணத்தில் வண்ணம் கொடு
சின்ன சின்ன விண்மீன்கள்
இரவுக்கு வெளிச்சம் தரும்
உன் சின்ன சின்ன சிரிப்பில் தான்
என் உயிர் பூத்திரிக்கும்
என் உயிர் பூத்திரிக்கும்

உரிமைகள் இல்லையடி
புதுமையாய் என்ன சொல்ல
வெறுமையும் இல்லையடி கண்ணம்மா
எதிலும் இனிமைக் கண்டுக்கொண்டேன்

அழுது புழம்புவதில் அர்த்தம் எதுவுமிலை
வர்த்தம் வாழ்க்கையில் ஓர் வாக்கியமடி
அறிந்து புரிந்துக் கொண்டால்
பொருள்கள் வாழ்வில் நிறைய உள்ளத்தடி
அதை நித்தம் நீ கண்டுப்பிடி

கண்ணம்மா காதல்

பாரதிமேல் முதல் காதல்:-

சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?
வட்டக் கரிய விழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ ?

பட்டுக் கரு நீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்டநடு நிசியில் - தெரியும்
நக்ஷத் திரங் ளடீ

சோலை மல ரொளியோ - உனது
சுந்திரப் புன்னகை தான்
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ
வாலைக் குமரி யடீ - கண்ணம்மா
மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசு கிறாய் - கண்ணம்மா
சாத்திர மேதுக் கடீ
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா
சாத்திர முண்டோ டீ
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்:
காத்திருப் பேனோடீ - இதுபார்
கன்னத்து முத்த மொன்று.

-----------------------------------

பாரதிமேல் இரண்டாம் காதல்:-

சின்னஞ்சிறு கிளியே - கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீ ர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்.

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்தரமே
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந்தேனே!

ஓடி வருகையிலே - கண்ணம்மா
உள்ளங் குளிரு தடீ
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ!

உச்சி தனை முகந்தால் - கருவம்.
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனையூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ!

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்த மாகு தடீ!

சற்றுன் முகம் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ!

உன்கண்டில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ!
என் கண்ணிற் பாவையன்றோ - கண்ணம்மா
என்னுயிர் நின்ன தன்றோ!

சொல்லு மழையிலே - கண்ணம்மா
துன்பக்கள் தீர்த்திடுவாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்ககந் தவிர்த்திடு வாய்.

இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமொர் தெய்வ முண்டோ?

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ?

 Posted by Picasa

ஓ காதலே...

ஓ காதலே...
உனக்கோர் கடிதம்
எழுதும் எதை நான்
ஒரு சொல்லில் உயிர் நான்
உருகும் என் கவிதை
உளரும் என் வெறுமை

காதல் கொடுத்தேன்
கண்ணீர் கொடுத்தாய்
கவலையில்லை
மண்ணில் மீண்டும்
மலர்கள் மலரும்

உள்ளம் என்ன?
வெறும் பள்ளம்
விழுந்து
எழுந்து நிற்க்கும்
குழந்தை
நான் தான்!

காயம் என்ன?
வாழ்வின் சாயம்
வெளுத்துப் போகும்
காலம் கடந்து

காதல் வந்தால்
கவிதைக் கொடுக்கும்
நன்றி சொல்வேன்
நாளை எவளோ?

என் தேடல் வலியாய்
என் தேடல் புதிராய்
என் தேடல் இருளாய்
எல்லாம்
காலம் வரும் வரைத் தான்

ஓ வானமே...
நீ என் எல்லை
ஒரு நாள் தொடுவேன்
அடைவேன் உனை நான்
அகிலம் எனது.

---------------------------------

மையம் கொண்ட சூறவாளி
அமைதியடைந்தப்போது,
எழுதிய கவிதை.

  Posted by Picasa

குழந்தை

குழந்தை -
ஓர் விஞ்ஞான வியப்பா?
ஓர் அற்புதப் படைப்பா?

குழந்தை -
கடவுளின் அருளா?
அவனின் பொருளா?

குழந்தை -
இனம் பொருக்கும் பிறவியா?
அறிவு சேர்க்கும் அமுதசுரபியா?

குழந்தை -
வாழ்க்கை ஆனந்தத்தின் பன்னீரா?
அதன் அவலங்களின் கண்ணீரா?

குழந்தை -
செலவான உறவுகளின் அழகா?
செல்லாத உறவுகளின் அழுக்கா?

குழந்தை -
அவசரக் காதலின் முத்தமா?
தேதி குறிக்காத முகூர்த்தமா?
முடிந்துபோகும் அந்த முத்தமா?

குழந்தை -
தனித்திருக்கும் தாய்மார்களுக்கு
சாவல்களை சமைத்த போராட்டமா?
சங்கடங்களை கிழிக்கும் பேரின்பமா?

குழந்தை -
மனித வளர்ச்சிக்குப் பாலமா?
சமுதாய பிரச்சனைகளின் பள்ளமா?

குழந்தை -
உலகின் எதிர்கலாமா?
வளர்ந்து வரும் அடிமை எந்திரங்களா?

குழந்தை -
அடுத்த அப்துல்கலாமா?
போர்க்களத்தின் மனித அணுகுண்டுகளா?

குழந்தை -
அனாதையென தெரிந்தால்
பிறப்பது பாசமா?
பார்த்தால் பாவமா?

குழந்தையெலாம் ஓர் வினா!
ஓர் வாழ்க்கை வினா.
விடை தருவது நாம்
அதை நன்று சிந்தித்து சீர்தூக்கி
சிறப்பாய் எழுதுவோம் நாம்!


--------------------------------------

எனக்கு முகவரி தந்த கவிதை
சிங்கையில் இளைய கவிஞன்று
தமிழ் முரசில் இரு முறை பிரசுரமானது
அளவில்லா களிப்படைந்தேன்

மீண்டும்....
எனை குழந்தையாக்கிய
ஹய்ருனுக்கு
என் நன்றிகளும்
இதய சமர்ப்பணமும்!

நிலாப் பெண்ணே...

நிலாப் பெண்ணே...

நீ
தூரமாகவே இரு
நித்தம் இரவுகளில்
எனைப் பார்த்துக்கொண்டே

நான்
உனது தூரத்து
சொந்தக்காரன்

அறிவியல் பூர்வமாக
உனது தன்மைகள்
எல்லாம் பொய்!
நீ மட்டும் மெய்
எனது மார்ப்புக்குள்

நீ
அரை முகம் காட்டினாலும்
அதில் தான்
மயக்கம்
அதிகமாகிறது
என்னுள்

--------------------------------
--------------------------------

என் கனவு விடிகிறது
துயிலைக் கடந்து
நீயும்
விலகிப்போகிறாய்
உன் சூரியனை
விட்டு...

சில்லென்று மழை....


வாய் மட்டும் பேசாமல்
புது மொழியெலாம் பிறப்பு
முகம் மட்டும் பாராமல்
உடலெலாம் நெருப்பு

விழிகளில் உருவெடுக்கும்
இதமாய் உயிர் பறிக்கும்
நிழல் மட்டும் பார்த்தாலே
நிஜமாய் இனித்துவிடும்

ஓடும் விளையாடும்
மூச்சுக்கள் குடியேறும்
மாறும் தடுமாறும்
தவிப்பில் இழைப்பாறும்

நேசம் வடிவமைக்க
விண்மீன்கள் குடைப்பிடிக்க
நீ எழுதும்
கவிதை தோற்றுப்போகும்
அவள் முன்னால்

மோகம் தலைவிரிக்க
தூரம் கைப்பிடிக்க
ஏக்கம் அழுவும்
உன் முன்னால்

மூச்சு வடிவில் ஒரு காதல்
முத்தம் வடிவில் ஒரு மோகம்
இது நடுவில் கவிதை ஓடும்
ஒன்றோடு ஒன்று சேராமல்
உலகம் மட்டும் ஓய்ந்திடும?