திà®à¯à®à®³à¯, ம௠29, 2006
யோசித்துப்பார்...
காலம் வகுத்த விதிமுறைகளே
பின்பற்றி
நாம்
நம் பாதையே தேடினோம்
தன்னந்தனியாக
உறவுடன்
ஆட்டு மந்தையாக
தேடினோம்...
படிப்புடன், பிடிப்புடன், நடிப்புடன்
கல்வியை
கனவை
காதலை
காசை
காமத்தை
கடவுளை
கல்லறையை
இழந்தோம்...
என்னவென்று
எண்ணி பார்த்தால்
மனசு சுருக்குப்பையை
அவிழ்த்து பார்த்தால்
நினைவு அலைவரிசையை
கேட்டுப்பார்த்தால்
புரியும்
தெரியும்
நமக்கே!
பà¯à®¤à®©à¯, ம௠17, 2006
தூறல்
கடவுள்
விடும் மூச்சு -
காற்று.
***
வானச்சுவரில்
ஓர் பிளவு -
மின்னல்.
***
ஆதாம் ஏவாள்
சண்டையாம் -
இடி.
***
ஆழ்ந்த யோசனையில்
ஏரிக்கரையில்
கடவுள்
விட்டேறிந்த கற்கள் -
மழை.
***
வானத்தில்
ஹோலி பண்டிகை -
வானவில்
à®à®¾à®¯à®¿à®±à¯, ம௠14, 2006
அவளுக்காக...
என் கனவெல்லாம்
பூப்போல்
நீ விரிந்திருப்பாய்.
என் ராவெல்லாம்
தனிமைக்கு
துணையாக
நீ இருப்பாய்.
எனக்கு எல்லாம் நீயே!
அன்பர் தினந்தன்று...
என் இதய முந்தானியில்
முடிஞ்சு வைத்த
அன்பை பொழிய நினைத்தேன்...
உனைத் தேடுவதைப்போல்
வார்த்தைகளைத் தேடுகிறேன்
உனக்காக எழுத நினைத்த
கவிதையில்....
காதலும் மதமும்
'காதல்' கொண்டு
உருவாகும் மதம்.
மதம் கொண்டு
உருளும் காதல்.
காதல் பிடித்து
அலையும் ஒரு தலை.
மதம் பிடித்து
உருளும் பலர் தலை.
காதல் பிரிந்தால்
ஓருயிர்.
மதம் பிரிந்தால்
ஒரு சமுகம்.
காதல்
உள்ளத்தின் உயிர்.
மதம்
இறைவனின் முகம்.
காதல் - ஜனனம்.
மதம் - மரணம்.
சமயம் பார்த்து
வருவதில்லை
காதல்.
சமயங்கள் வழிப்பட்டு
வளர்வது
மதம்.
காதலுக்கு வேண்டும்
இரு
மனம் சம்மதம்.
மதத்திற்கு மட்டும் போதும்
ஒரு
மனம் சம்மதம்.
காதல் இருந்தால்
உயிர்க்காலம் வரை
வாழ்வான் மனிதன்!
மதம் இருந்தால்
உயிர் முடிந்து
வாழ்வான் மனிதன்......?
காதல்....
மனிதனின் மதம்!
கனவு
கடலைப் போல்
நீ
உன் ஆளத்தை
குறிப்பிடவில்லை.
எல்லைத் தொடாத
வானமும் நீ
உன் நிலத்தில்
நடுவதால்
பரினாம வளர்ச்சிகள்
சுவாசிக்க காற்று
நிறைவான
வாழ்க்கைக்கு
நீ முக்கியம்.
வளரும் தீ
ஒரு நாள்
நீ
பற்றிக்கொள்வாய்
அலைகள் போல்
வருகிறாய்
சுனாமியைப் போல்
ஆழிப்பதில்லை
ஆக்குவாய்
மனிதனை!
எழுத வேண்டும்
கண்விழி வழியே
செவி வழி நுலையே
நினைத்ததை நான் எழுத.
மனசு அறியே
இதயம் திறக்க
நினைத்ததை நான் எழுத.
வெளிச்சம் உதிர
ஞானம் வளர
நினைத்ததை நான் எழுத.
காதல் கொள்ள
கவிதை புனைய
நினைத்ததை நான் எழுத.
கனவு விதைக்க
நனவு தளிர
நினைத்ததை நான் எழுத.
நெஞ்சம் மகிழ
கவலை விலக
நினைத்ததை நான் எழுத.
உலகம் பழக
உரிமைகள் தெரிய
நினைத்ததை நான் எழுத.
நினைவுகள் மலர
உள்ளம் நெகிழ
நினைத்ததை நான் எழுத.
நினைவாக நானிருக்க
நிசமாக நானிருக்க
நினைத்ததை
நான் எழுத வேண்டும்!