à®à®¾à®¯à®¿à®±à¯, à®à®©à®µà®°à®¿ 07, 2007
கடைசி
காதலி சொன்ன கடைசி வார்த்தையாய்
கையில் இருக்கும் கடைசி வெள்ளியாய்
எனை நீ என்றும் மதிப்பதிலை.
எப்போழுதும் முதல் தான்!
எந்த முதலும்
உனக்கு முதலிரவாய் பிடிக்கும்.
கடைசியில் தான்
முழு விஷயமும் புரியும்
என்னவோ
கடைசியில் இருப்பது
பிடிப்பதேயில்லை.
பந்தயத்தில் கடைசியாக வந்து
லட்சியம் கொண்டாய் வெல்வதாய்
கடைசி வாய்ப்பையும் இழந்து
நீ உடைந்துப்போக
உன்னோடு பிறப்பான் ஒரு பாரதி
எப்படியோ
கடைசி நிமிஷத்தில் மட்டும்
புரியாமல் விளங்குகிறது
உனக்கு எல்லாம் முக்கியம்!
முதலில் வந்தால்
நீ விடுவது பந்தா
கடைசியில்
நீ அடைவது பக்குவம்.
புரிந்துக்கொள்!
கடைசியில் அடைவது
அமரமல்ல!
நீ தெய்வம்.
உடைந்த வளையல்களும் சில கிறுக்கல்களும்
உயிர் மையால்
எழுதப்பட்ட காதல் கடிதம்
திருத்தும் சிகப்பு பேனா
கைகோர்த்து ஜோடிகள்
போகும் பாதை பக்கம்
ஒர் ஒத்தையடி பாதை
முத்தம் கொடுக்கும் காட்சி
பிம்பமாய்
உடைந்த கண்ணாடியில்
உருவிய முத்து மாலை
கோர்க்கும்
கண்ணீர்த்துளிகள்
பனித்துளிகள்
படர்ந்த தேகம்
ஊசிகளாய் குத்தும்
சிலர் மனசில்
மவுனமாய்
நிகழும்
ஒரு மாறுப்பட்ட மரணம்
சிரிப்போடு அழுகையும்
காட்டிக்கொள்ளாமல்
தனக்குள்
சமரசம் செய்யும்
காதலித்த மனசு
à®à®©à®¿, à®à¯à®ªà¯à®à®®à¯à®ªà®°à¯ 23, 2006
வேர்களை மறந்த விழுதுகள்
'' வணக்கம், தமிழ் மொழி ''
'' ஹாய்! உள்ள வா.''
இயல்பாய்
உபசரித்தான் நண்பன்
'' பார்த்து எவ்வளவு நாளாச்சு! ''
'' வேல, வாழ்க்கைன்னு வந்துட்டா
எல்லாம் அப்படித்தான்! ''
தாய் தந்த தமிழ் பாஷையில்
மற்றவை
தத்தெடுத்த ஆங்கிலத்தில்
விசாரித்துக்கொண்டோம்.
வீடு
நவின முறையில்
சொகுசாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது
இந்திய சாயலேயில்லை
கருவறை தவிர
வீட்டுத் தலைவி
நவநாகரிக மங்கை
காலம் மாற்றிய நங்கை
இவர் பெயர் கங்கை
சம்பட்டை சாயம் பூசிய
கூந்தல்
கட்டையாக
கட்சிதமாய்
பார்பீ பொம்மை ஸ்டைலில்
கொடுத்தார்
வாய் மணக்கும் புன்னகையோடு
சுடான தேனீர்ரல்ல
ஜீல்லென்ற பழரசம்
பலகாரம்?
அது பழைய பழக்கம்!
மேசையில்
உயிர் தர ஆங்கில நாளிதழ்கள்
ஆங்கில சஞ்சிகைகள்
உணர்வுகளைத் தீண்டும்
படங்களோடு
தமிழ் முரசு எங்கே?
குமுதம், விகடன்?
கண்ணும் மனசும் துலாவியது.
தொலைக்காட்சியில் ஜீ டிவி
அமிதாப் பச்சன்
எங்களோடு
இந்தியில் உரையாடினார்
அவ்வேளையில்
வேலை பார்க்கும் முதல் மகன்
தன் சீனக் காதலியுடன்
வீட்டுக்குள் வந்தனர்
முகத்தில்
நடுக்கம், திகைப்பு, நாணம்
ஒன்றுமில்லை
சர்வ சாதரணமாய்
அறிமுகம் படுத்திக் கொண்டனர்.
சார்ச்சையின்றி
சலனமின்றி
சங்கிதமாய்
அறைக்குள் சென்றனர்
வானத்தில் பறந்து மறைந்த
ஜோடி பறவைகளாய்.
இன்னொரு அறையில்
ஆங்கில 'பாப்' இசை படர்ந்திருந்தது
இரண்டாம் மகள்
பாடும் ஆங்கில பாடகியாய்
உடையிலும் நடையிலும்
மேற்கத்திய மோகத்தின் நகல்.
கணினியில் கடைக்குட்டி
மின்னியல் உலகில்
மின்மினி பூச்சிகள் போல் திரிந்தன
அவன் கண்கள் திரையில்
'' அங்கிள்க்கு ஹாய், சொல்லு! ''
இயந்திரமாய்
'' ஹலோ அங்கிள் ''
'' உன் பெயரென்ன? ''
'' பாரதி ''
மேனி மெய் சிலிர்த்தது
மனசு நிறைவானது
எதையோ நினைத்து...
à®à®¾à®¯à®¿à®±à¯, à®à¯à®ªà¯à®à®®à¯à®ªà®°à¯ 17, 2006
மெழுகுவர்த்தி
இதயத்தில் எரிக்கிறது
மெழுகுவர்த்தி
ஆசைகளாய்
காதலாய்
கனவுகளாய் சேர்ந்து
சுடர் விடும் வாழ்க்கை
சில ஆசைகள் சுடும்
காதல் சுடும்
உருகும் மெழுகாய்
கடமைக்காக
தீ திண்ட தியாகியாய்
தன் உடல் எரித்து
ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி
எடுத்துக்காட்டும்
எத்தனை நிஜ எடுத்துக்காட்டுகள்
நமது பார்வையில்
பல வண்ணம்
பல அளவு
கொண்ட மெழுகுவர்த்தி
சுடரும் ஒளி ஒன்றே
ஞானம் சுட்ட மானிடா
உன் வேற்றுமைகளைக் கிழி
உன் விழிகளில் எரியும்
நெருப்பு அணையும் முன்
படித்துக்கொள்
மெழுகுவர்த்தி பாடம்
'யாதும் நிரந்தரமில்லை!'
புரிந்துக்கொண்டால்
நிறைவாய் வாழ்வாய்
உன் வழியில்
ஒரு சக்கரவர்த்தியாய்!
சுவடுகள்
நான் பிறந்தேன்
வருட முறை வரும்
கொண்டடாத பிறந்த நாள்
பிறப்பின் ஞாபக சுவடு
நான் வாழ்ந்தேன்
நினைவில் நிறுத்தி
உண்மை சொல்லும்
சுவடுகள் பற்பல
கண்ணீர் கொப்பளத்தில்
பிம்பம் பார்ப்பது போல்
காயத் தழும்புகளாய்
அங்கங்கே
பத்தரமாய் பதமாய்
இருக்கும்
நினைவு அவிழ்ந்தால்
உடை அவிழ்ந்தால் வரும்
கூச்சம் அச்சம் அவமானம்
உடை உடுத்திக் கொள்ளும்
சில சுவடுகள்
சில்லாய் ஒரு சு- வடு
முதல் முறை சொல்லாமல்
அவள் பெயரை
பென்சிலால் எழுதினேன்
கூச்சத்தால்
அழித்தும்
அச்சாய் அழியாமல்
காலத்தோடு வாழ்கிறது
காதல் சுவடாய்
மலாயா வரலாறு
பாடப் புத்தகத்தில்
à®à¯à®µà¯à®µà®¾à®¯à¯, à®à®à®¸à¯à®à¯ 08, 2006

Thanks www.ndp.org.sg
தலை வணக்கம், சிங்கப்பூர்
தோன்றிய காலத்திலிருந்து
தரத்தை நம்பினாய்
மரம் போல் வளர்கிறாய்
வல்லரசு தோட்டங்களை மட்டும் மல்ல
எல்லாத் தோட்டங்களையும்
தொடுகின்றது உனது கிளைகள்
வள்ளுவன் வரிகளை மெய்ப்பிக்கிறாய்
ஒழுக்கம் உன் பழக்கத்திற்குப்போன
மந்திர புழக்கமாய்
சிந்தனை செய் மனமே
சிகரம் தொடலாமேன்று
தெள்ளத் தெளிவாய் கற்றுத் தருகிறாய்
நித்தம் ஏழிலாய் எங்களுக்கு
நீ...
சொர்க்கலோகம் உன் மக்களுக்கு
கனவு மண்டலம் வரும் பயணியர்களுக்கு
ஒரு கல்விக் கூடம் உலக நாடுகளுக்கு
உலகம் மிக மிக சிறியது
என உன் மையத்தில்
ஒரு உலக மயம்
நான் கண்டுப்பிடித்தேன்
கருப்பு வெள்ளையாய் நிருப்பிக்கிறாய்
மக்கள் பலம் எதையும் வெல்லுமென்று
அதை விட என் மனதை நனைப்பது
பல வண்ணம் கொண்ட
ஒரு வானவில் - உன் மக்கள்
உன் மேன் மக்கள்
எந்த வேதம் வேற்றுமையின்றி
வாய் மலர்ந்து
பெருமையாக சொல்வார்கள்
'' நாங்கள் சிங்கப்பூரர்கள்! ''
à®à®©à®¿, à®à®à®¸à¯à®à¯ 05, 2006
ஆடி அடங்கும் வாழ்க்கையட
நீ ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திலும்
நீ சிங்கம்
அசிங்கம் உன் எதிரி
எது வெல்லும்?
நீ போடும் ஒவ்வொரு கோடுகளும்
இன்னொருவன் தாண்டாமல்
இருக்க போட்ட கோடு
தப்பித் தவறி தாண்டினாலும்
தந்திர மந்திரமாய்
மின்சாரக் கம்பியாய் மாறினாலும் மாறும்
மனித வரிசையில்
நீ கடைசியில் நின்றாலும்
உனக்கு மட்டும் ஏப்படி
முதலிடம்?
ஆசையாய் தூண்டில் போடுகிறாய்
அது இன்னொருவனுக்கு
தூக்கு கயிறாய்
இரத்தக் கயிறு
பாசக் கயிறு
தொப்புள் கயிறு
தாலிக் கயிறு
எல்லாம்
நீ ஆடும் ஆட்டத்தில் விழாமல்
உனை இழுத்து பிடிக்கும் கயிறுகள்
ஏனோ உன் தப்பாடத்தில்
உனக்காக துண்டிக்கப்படுவது
அக்கயிறுகளே
தப்பு தப்பாய் கணக்குப் போட்டு
அதை சரியாக்குவது
வழகத்திற்குப் போன
உன் சுயப் பழக்கம்
பூஜ்ஜியத்திற்கும் மதிப்பிடுகிறாய்
நடக்கட்டும்...
உனது ராஜ்ஜியம்
சினச் சுவர் வரை பரவியிருந்தாலும்
கடைசியில் அந்ந ஆறடிக்குள் தான்
வந்து முடிவடையும்!
இதை நன்று புரிந்துக் கொள்வாய்
என் புத்தியுள்ள மானிடா!
முகவரிகள்
நான்
நல்ல மகன்?
என் நாவில் நரம்புயிருக்கிறது
அதனால் சொல்ல தெரியவில்லை.
நான்
நல்ல அண்ணன், தம்பி?
மாமன், மச்சான்?
அவை எனக்கு பொறுந்தவில்லை.
நான்
நல்ல காதலன்?
என் காதல் கவிதைகள்
வந்து இதயம் வெட்டும்
நான் லாயக்கற்றவன்.
நான்
நல்ல கணவன்?
நல்ல தகப்பன்?
அந்த ஆண்டவன்
எனக்கு அருள் புரிவனாக.
நான்
நல்ல நண்பன்?
விரல்களால் எண்ணும் நண்பர்கள்
மனம் விட்டு உறுதிபடுத்துவார்கள்.
நான்
நல்ல தமிழன்?
கண்ணீர் அஞ்சலியில்
வாசிக்கப்படலாம்.
நான்
நல்ல மனிதன்?
கடைசி யாத்திரையில்
எனை தூக்கிச் செல்லும்
அந்த மகா மனிதர்கள்
சொன்னால் போதும்.
நான்
நல்ல கவிஞன்?
பிற்காலத்தில் என் எழுத்துக்கள்
பொய் சொன்னாலும் சொல்லும்.
à®à¯à®µà¯à®µà®¾à®¯à¯, à®à¯à®²à¯ 25, 2006
பிதாமகன்
தத்தி தத்தி நடக்கும் வயதில்
இந்த சுட்டி பேபிக்கு - நீ
என் விளையாட்டு சினேகிதன்
நீ உயிருள்ள விளையாட்டு பொம்மை
சர்கஸ் சகல வித்தைகள் காட்டும்
என் புன்னகை மன்னன்
நீ அடித்தால் எனக்கு வலிக்கும்
நான் அடி அடியாய்
உதை உதையாய் உதைப்பேன்
உனக்கு இன்பம் சுரக்கும்
புரியாத மொழிகளில்
நாம் அரசியல் பேசுவோம்
அரசியல் நடத்துவோம்
என்றும் வெல்வது நான்
தோற்பது நீ!
ராஜ்ஜியம் எனது
கொடி உனது!
சைக்கிள் பழகும் பருவம்
காயம் படாமல் கற்றுத்
தந்தாய் நீ
பூப்போன்ற பருவமது
அன்பால் அரவணைத்தாய்
இதமாய் தாலாட்டுவாய்
எல்லாம் கற்றுத்தந்தாய்
எனை கறை சேர்ப்பாய்
கடன் பட்டவன் நான்!
எல்லாம் மாறியது ஏன்?
பைக் ஓட்டும் பருவம்
வந்தப்பின்
நீ தான் எனக்கு வில்லாதி வில்லன்
நம் வீட்டுக்கு ரவுடி
நீயா? நானா?
அம்மாவைக் கேள்!
உன் நிழலில் வாழ்பவன்
உன் நிழலைக் கண்டால்
எனக்கு அபாயம்
பார்த்தும் பார்க்காமலும்
ஓரே பார்வையில்
பேச்சும் மூச்சும்
புதுபிக்கும் பழைய அரசியல்
அப்பப்ப 'வயசு' கலவரங்கள்
தொடரும் அராஜகமும்
'சர்வாதிக்கார' உன் ஆட்சியும்
ஆதலால் ஆனோம்
எதிரும் புதிருமாய்
காலங்கள் மாறலாம்
பருவங்கள் மாறாது
அதன் அழகையும்
அழுக்கையும் அறியாத
நம் மனம்?!
அறிந்தும் அறியாமலும்
நாம் நம்மைத் தேடுவோம்
உருகும்
நெகிழும் பொழுதுகளில்
எனக்கு நம்பிக்கையிருக்கிறது
கார் ஓட்டும் காலத்திலவது
உனை முன் இருக்கையில்
நண்பனாய் அமர வைத்து
நான்...
நாம் ஊர் சுற்றுவோம்
ஞாபகம் இருக்கிறதா?
எனை முதற் முதலில் பார்த்து
சொன்னாய்...
உனைப்போல் நானிருக்கிறேன்
அப்பொழுது எனக்கு புரிந்திருக்காது
இப்பொழுது நான் சொல்றேன்
உனைப்போல் நான்
உருவத்திலும்
உணர்வுகளிலும்
இது மறவாதே உண்மை
மாறாது நம் உறவும்.
-----------------------------
முழுவதும் கற்பனையில் எழுதிய 'காவியம்'
யதார்த்தம் நிழலாய் பரவியது எழுதிய பின்
ஒவ்வொரு வரிகளிலும்
ஒரு தந்தையும் ஒரு மகனும் ஒழிந்திருக்கலாம்
என் தந்தையும் நானும் சில வரிகளில்
சிதைந்து போகாமல்
அந்த சில்லறைப் பேச்சுகளிலும்
சின்னமாய் இந்த எழுத்துகளிலும்!
à®à®¾à®¯à®¿à®±à¯, à®à¯à®²à¯ 09, 2006
எவனோ ஒருவன்...
எவனோ ஒருவன் வாசிக்கின்றான்
வசியம் செய்யாமல் நேசிக்கின்றான்
எதை எதையோ யோசிக்கின்றான்
எதையும் சொல்லாமல்
எல்லை மிறாமல்
எண்ணம் மாறாமல்
ஏங்கித் தவிக்கின்றான்
மெல்ல மெல்ல
என் இதயம் திறந்து பார்க்கின்றான்
வெல்லத் தெரியாமல்
அடிக்கும் அலைகளில் தத்தளிக்கின்றான்
தீக்குச்சி போல் என் கனவுகளின் எறிக்கின்றான்
ஈக்குச்சி வைத்து
கவிதைகள் இதயத்தில் கிறுக்குகின்றான்
உருகும் அவன் விழிகளில்
உருகும் மெழுகுவர்த்தியாய் உருகுகின்றேன்
உருகும் மெழுகை அழகாய் காதல் மை பூசி
கண் இமை சிமிட்டாமல் காத்திற்கின்றான்