செவ்வாய், ஆகஸ்ட் 08, 2006


Thanks www.ndp.org.sg Posted by Picasa

தலை வணக்கம், சிங்கப்பூர்

தோன்றிய காலத்திலிருந்து
தரத்தை நம்பினாய்
மரம் போல் வளர்கிறாய்
வல்லரசு தோட்டங்களை மட்டும் மல்ல
எல்லாத் தோட்டங்களையும்
தொடுகின்றது உனது கிளைகள்

வள்ளுவன் வரிகளை மெய்ப்பிக்கிறாய்
ஒழுக்கம் உன் பழக்கத்திற்குப்போன
மந்திர புழக்கமாய்

சிந்தனை செய் மனமே
சிகரம் தொடலாமேன்று
தெள்ளத் தெளிவாய் கற்றுத் தருகிறாய்
நித்தம் ஏழிலாய் எங்களுக்கு

நீ...
சொர்க்கலோகம் உன் மக்களுக்கு
கனவு மண்டலம் வரும் பயணியர்களுக்கு
ஒரு கல்விக் கூடம் உலக நாடுகளுக்கு
உலகம் மிக மிக சிறியது
என உன் மையத்தில்
ஒரு உலக மயம்
நான் கண்டுப்பிடித்தேன்

கருப்பு வெள்ளையாய் நிருப்பிக்கிறாய்
மக்கள் பலம் எதையும் வெல்லுமென்று
அதை விட என் மனதை நனைப்பது
பல வண்ணம் கொண்ட
ஒரு வானவில் - உன் மக்கள்
உன் மேன் மக்கள்
எந்த வேதம் வேற்றுமையின்றி
வாய் மலர்ந்து
பெருமையாக சொல்வார்கள்
'' நாங்கள் சிங்கப்பூரர்கள்! ''

சனி, ஆகஸ்ட் 05, 2006

ஆடி அடங்கும் வாழ்க்கையட

நீ ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திலும்
நீ சிங்கம்
அசிங்கம் உன் எதிரி
எது வெல்லும்?

நீ போடும் ஒவ்வொரு கோடுகளும்
இன்னொருவன் தாண்டாமல்
இருக்க போட்ட கோடு
தப்பித் தவறி தாண்டினாலும்
தந்திர மந்திரமாய்
மின்சாரக் கம்பியாய் மாறினாலும் மாறும்

மனித வரிசையில்
நீ கடைசியில் நின்றாலும்
உனக்கு மட்டும் ஏப்படி
முதலிடம்?

ஆசையாய் தூண்டில் போடுகிறாய்
அது இன்னொருவனுக்கு
தூக்கு கயிறாய்

இரத்தக் கயிறு
பாசக் கயிறு
தொப்புள் கயிறு
தாலிக் கயிறு
எல்லாம்
நீ ஆடும் ஆட்டத்தில் விழாமல்
உனை இழுத்து பிடிக்கும் கயிறுகள்
ஏனோ உன் தப்பாடத்தில்
உனக்காக துண்டிக்கப்படுவது
அக்கயிறுகளே

தப்பு தப்பாய் கணக்குப் போட்டு
அதை சரியாக்குவது
வழகத்திற்குப் போன
உன் சுயப் பழக்கம்

பூஜ்ஜியத்திற்கும் மதிப்பிடுகிறாய்
நடக்கட்டும்...

உனது ராஜ்ஜியம்
சினச் சுவர் வரை பரவியிருந்தாலும்
கடைசியில் அந்ந ஆறடிக்குள் தான்
வந்து முடிவடையும்!

இதை நன்று புரிந்துக் கொள்வாய்
என் புத்தியுள்ள மானிடா!

முகவரிகள்

நான்
நல்ல மகன்?
என் நாவில் நரம்புயிருக்கிறது
அதனால் சொல்ல தெரியவில்லை.

நான்
நல்ல அண்ணன், தம்பி?
மாமன், மச்சான்?
அவை எனக்கு பொறுந்தவில்லை.

நான்
நல்ல காதலன்?
என் காதல் கவிதைகள்
வந்து இதயம் வெட்டும்
நான் லாயக்கற்றவன்.

நான்
நல்ல கணவன்?
நல்ல தகப்பன்?
அந்த ஆண்டவன்
எனக்கு அருள் புரிவனாக.

நான்
நல்ல நண்பன்?
விரல்களால் எண்ணும் நண்பர்கள்
மனம் விட்டு உறுதிபடுத்துவார்கள்.

நான்
நல்ல தமிழன்?
கண்ணீர் அஞ்சலியில்
வாசிக்கப்படலாம்.

நான்
நல்ல மனிதன்?
கடைசி யாத்திரையில்
எனை தூக்கிச் செல்லும்
அந்த மகா மனிதர்கள்
சொன்னால் போதும்.

நான்
நல்ல கவிஞன்?
பிற்காலத்தில் என் எழுத்துக்கள்
பொய் சொன்னாலும் சொல்லும்.